Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மாட்டு சாணத்தை ஊற்றுவோம் அப்துல் ரஹீம் எச்சரிக்கை…..

0

நடிகை குஷ்பு மீண்டும் முஸ்லீம்கள் பற்றி கருத்து எதாவது கூறினால், இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாட்டு சாணத்தை அவர் மீது ஊற்றுவோம். நடிகை குஷ்பு இந்து மதத்திற்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் தேவையில்லாமல் அடிக்கடி முஸ்லீம்கள் பற்றி கருத்து சொல்வதும், நானும் முஸ்லிம்தான் என தம்பட்டம் அடிப்பதுமாக உள்ளார்.

சமீபத்தில் ஹிஜாப் பற்றியும் கருத்து கூறியுள்ளார் குஷ்பு, ஹிஜாப் பற்றி கருத்து கூற எந்தவித அருகதையும் குஷ்புவுக்கு இல்லை. தனது கணவர் சுந்தர் சி குழந்தைகள் அனைவரையும் இந்து முறைப்படி வளர்க்கிறார். ஆக தானும் மதம் மாறி தனது பிள்ளைகள் கணவர் என அனைவரும் இந்து மதத்தை பின்பற்றிய பிறகு எதற்காக அடிக்கடி குஷ்பு நாடகம் ஆடுகிறார். ஒரு இந்து தாய் தந்தைக்கு பிறந்தார் என்றால் அவர் இந்து என சொல்லலாம் ஒரு கிறிஸ்தவ தாய் தந்தைக்கு பிறந்தார் என்றால் அவர் கிறித்தவர் என சொல்லலாம் ஆனால் ஒரு முஸ்லிம் தாய் தந்தைக்கு பிறந்தார் என்பதற்காக ஒருவர் முஸ்லீமாக கருதமுடியாது காரணம் இறையச்சம் மற்றும் வணக்க வழிபாடு உட்பட இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே அவர் முஸ்லிம் என கருதமுடியும்.

 

இஸ்லாமிய கலாச்சார வழிபாட்டு கோட்பாடுகளை அழிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு செயல்படும் ஆர்எஸ்எஸின் அரசியல் பிரிவான பாஜக கட்சியில் இணைந்து முஸ்லிம்கள் பற்றியும் ஹிஜாப் பற்றியும் கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன உள்ளது.திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க பணத்தை பெற்று கொண்டு நீச்சல் உடையில் நடிப்பதும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதும் தான் குஷ்புவின் வாடிக்கை
என்பது உலகம் அறிந்தது.

திருமணத்திற்கு முன்பே பெண்கள் செக்ஸ் (உடலுறவு) வைத்து கொள்ளலாம் என தான் செய்த அசிங்கமான செயலை நியாயபடுத்த மக்களும் பின்பற்ற வேண்டும் கூறி இதே ஆர்எஸ்எஸ் பாஜகவால் கண்டனத்துக்கு உள்ளானவர் தான் குஷ்பு என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். ஆக குஷ்புவின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராக இருந்து வருகிறது. இந்நிலையில் ஹிஜாப் பற்றி கருத்து கூறி உள்ளார். இத்தோடு இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகள் பற்றி எதாவது மீண்டும் பேசினால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் குஷ்பு மீது இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் மாட்டு சாணத்தை ஊற்றுவார்கள். இவ்வாறு தடா ஜெ அப்துல் ரஹிம் எச்சரித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்