Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பதிவிட்டதற்காக அண்ணாமலை அவர்கள்…..

0

மேற்கு வங்க ஆளுநர் சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கிவைக்க உத்தரவு பிறத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதால் தான் மேற்கு வங்க சட்டப் பேரவையை ஆளுநர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே விவரம் தெரியாமல் ஸ்டாலின் பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

சீக்கியர்களுக்கு டர்பென் அணிய அரசியல் சட்டத்தில் இடம் உள்ளது. அவர்களை தவிர அனைத்து மதத்தினரும் பள்ளி கல்லூரிக்குள் மத அடையாளங்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ஹிஜாப் அணியாமல் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்குள் செல்லும் சட்டம் அமல்படுத்தப்படும்.

நகை எல்லாம் அடகு வைத்து மாதம் மாதம் வட்டி கட்டிக்கொண்டு இருக்கின்றனர். 73 சதவீதம் பேருக்கு நகை கடன் திரும்ப பெறவில்லை. 517 வாக்குறுதியில் 7 வாக்குறுதியை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. கோவை திமுக மீது நம்பிக்கை இல்லாமல் கரூர் திமுகவினர் வந்து பிரச்சினைகளை தீர்க்க போகின்றனர்’ என்று பேசினார்.

அவர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குன்னூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘8 மாத கால திமுக ஆட்சியை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல் ஒரு மாதம் கோவைக்கு தர வேண்டிய கொரோனா ஊசியை குறைத்து கொடுத்தது. பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே ஊசி வழங்கப்பட்டது. 8 மாதத்தில் 80 ஆண்டு கோபத்தை இந்த அரசு பெற்றிருக்கிறது. தமிழக முதல்வர் பிரச்சாரத்திற்கு வராமல் கம்பியூட்டரை பார்த்து பிரச்சாரம் மேற்கொள்கின்றார். வாக்குறுதியின்போது கொடுத்த ரூ. 1000 கேட்பார்கள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வரவில்லை.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மேலும் அந்த இளைஞனுக்கும் திமுகவிற்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் முதல் கொண்டு பாலியல் வன்கொடுமைகள் வரை அரங்கேறி வருவது இதற்கு எடுத்துக்காட்டு. இது தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்