நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளும் திமுக பிரச்சாரம் செய்து வந்தாலும், பாஜக, அதிமுக அளவிற்கு வீடு வீடாக பிரச்சாரம் செய்யவில்லை. அதிமுக, பாஜக அளவிற்கு திமுகவினர் அவ்வளவு பெரிதாக களத்தில் பிரச்சாரம் செய்யவில்லை.
மேயர் பதவிகளை திமுகதான் அள்ள போகிறது என்று ஏற்கனவே உளவுத்துறை தமிழ்நாடு அரசுக்கு கொடுத்த ரிப்போர்ட் காரணமாக அமைச்சர்கள், நிர்வாகிகள் இப்படி மெத்தனமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் திமுக தலைமைக்கு உளவுத்துறை கொடுத்த புதிய ரிப்போர்ட்டில், அதிமுக, பாஜக களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. திமுகவும் தீவிரமாக் பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கடைசி நேரத்தில் நிலவரம் மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முக்கியமான தலைகளை பிரச்சாரத்தில் இறக்குங்கள் என்று திமுகவிற்கு உளவுத்துறை அறிவுரை வழங்கி உள்ளதாம். இதையடுத்தே நேற்றில் இருந்து திமுக தனது மொத்த படையையும் பிரச்சாரத்திற்காக களமிறக்கி உள்ளதாக ஆளும் தரப்பு தெரிவிக்கிறது.நேற்று ஒரே நாளில் எம்பி கனிமொழி, எம்பி ராசா, மற்ற திமுகவின் டாப் எம்பிக்கள் எல்லோரும் மொத்தமாக பிரச்சாரத்தில் குதித்து உள்ளனர். அமைச்சர்களும் களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.