Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

வியாபாரிகள் விழித்துக்கொள்ளுங்கள் டிஜிட்டல் முறையில் gpay phonepa…..

0

திருப்பூரின் பிரதான கடைவீதியில் உள்ள கடைகளில்.., பண பரிவர்த்தனை க்காக ஒட்டப்பட்டுள்ள gpay PhonePe போன்ற நிறுவனங்களின் QR code ஸ்டிக்கர் மீது மர்ம நபர்களால் நள்ளிரவில் டுப்ளிகேட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது..

டீக்கடை, ஸ்பேர் பார்ட்ஸ் கடை போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் முன்புறம் நின்று பொருட்கள் வாங்குவதால் QR code ஸ்டிக்கரை முன்புறமுள்ள சுவற்றில் அல்லது பில்லரில் சௌகரியத்திற்காக ஒட்டி இருப்பார்கள்.

கடையின் ஷட்டர்க்கு வெளியே உள்ள அனைத்து ஸ்டிக்கர் களிலும் மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்..

இதனால் தங்களது வாடிக்கையாளர் செலுத்தும் பணம் யாரோ ஒரு மர்ம நபரது வங்கி கணக்கிற்கு சென்றடையும்..

யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தெளிவாக QR code மட்டுமே வெட்டி ஒட்டி உள்ளனர்…

இரண்டு அல்லது மூன்று ஸ்டிக்கர்கள் இருந்தாலும் அனைத்தின் மீதும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது..

ஆகவே உங்களது கடையிலும் இதுபோன்று ஸ்டிக்கர் வெளிப்புறமாக இருந்தால் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்…

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்