அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் எனவும், 28 பேருக்கு விடுதலை வழங்கியும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்ரான அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலால் 56 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 240 பேர் காயம் அடைந்தனர். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் பொது வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தேசம் முழுவதையும் அதிரவலைகளை ஏர்படுத்தியது. இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் (ஐஎம்) உடன் தொடர்புடையவர்கள், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ராவுக்குப் பிந்தைய கலவரத்திற்குப் பழிவாங்கும் வகையில், ஐ.எம் உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதாக காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுத்தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 35 வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு வழக்காக மாற்றப்பட்ட பிறகு விசாரணை தொடங்கியது. குண்டுவெடிப்பு நடந்த அகமதாபாத்திலும், அகமதாபாத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு வெவ்வேறு இடங்களில் இருந்து வெடிகுண்டுகளை மீட்ட காவல்துறையினர் முதல் தகவலறிக்கையை பதிவு செய்தனர். இதுத்தொடர்பான வழக்கு விசாரணையின் போது, குண்டுவெடிப்புக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு, 2009 இல் விசாரணையைத் தொடங்கிய சிறப்பு நீதிபதி படேல் முன் அரசுத் தரப்பு 1,100 சாட்சிகளை விசாரித்தது. கொலை, கொலை முயற்சி மற்றும் கிரிமினல் சதி தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சபர்மதி மத்திய சிறைச்சாலையில் ஆரம்பத்தில் இந்த உயர்மட்ட மற்றும் முக்கிய வழக்கின் விசாரணை நடைபெற்றது. பின்னர் பெரும்பாலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டன. இந்த விசாரணையின் போது, 26 சாட்சிகள் முக்கிய சாட்சிகளாகக் குறிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் பாதுகாப்பிற்காக அவர்களின் அடையாளங்களை மறைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை நீதிமன்றம் மற்றும் அரசு தரப்பு உறுதி செய்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில், நான்கு பேர் ஒப்புதல் அளித்தவர்களாகக் கருதப்பட்டனர். ஒப்புதல் வாக்குமூலத்தில் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இருப்பினும் அவர்கள் சட்டப் போராட்டத்தை நடத்தினர். பின்னர் அவர்கள் பின்வாங்குவதை உறுதிப்படுத்தினர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஒப்புதல் அளிக்க முன்வந்தார். மேலும் அவரது கோரிக்கை விசாரணையின் போது நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விசாரணை நாளை தொடங்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.