அண்ணாவின் 53ஆவது நினைவு நாளான பிப்.3 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மூன்றாவது மண்டல அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுகவின் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் மாநகராட்சி விதித்திருந்த நேரக்கட்டுப்பாட்டை மீறி தாமதமாக வந்து மாலை அணிவித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில் கட்டுப்பாட்டுடன் மாலை அணிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலும் திமுகவினர் கால தாமதமாக வந்து மாலை அணிவித்துச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
திமுகவினர் மீது அதிமுகவினர் புகார்!இந்த நிலையில், நேற்று (பிப் 04) அதிமுகவின் வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு, அனுமதியின்றி பூட்டியிருந்த சிலையின் கதவுகளை உடைத்துத் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இச்செயலில் ஈடுப்பட்ட அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் படியும், தேர்தலில் எந்த அழுத்தமும் இன்றி முறைப்படி நடத்தக் கோரியும் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான அசோக்குமாரிடம் மனு அளித்தனர்.