Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

திமுக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி…..

0

அன்று ஜெகத்ரட்சகன் முன்னாள் திமுக எம்பி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் இருந்த சுற்றி வளைக்கிறது அமலாக்கத்துறை மேலும் தொடரும் என்று கருத்து.

திமுக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அவருக்கும், குடும்பத்தினருக்கும் சொந்தமான, 160 ஏக்கர் நிலத்துக்கும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறையினரின் அதிரடி நடவடிக்கையால், அமைச்சருக்கு சொந்தமான, 6.50 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவில் உள்ளார். இவர் 2001-2006 காலகட்டத்தில் அதிமுக தலைமை அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக 2006ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிமாக முடக்கியுள்ளது. அந்த வகையில் 100 ஏக்கர் நிலம், வீடுகள், சொகுசு கார்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பண பரிமாற்றம் வாயிலாக, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட ஏழு பேர் மீதும், அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்