தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், வீட்டிற்கே அழைத்து வந்து, கள்ளக்காதலியிடம் கொஞ்சிய ஆத்திரத்தில், மிளகாய்பொடி தூவி, கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்,
தென்காசி மாவட்டம், செங்கோட்டை , பண்மொழி , திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா , இவரின் மகன் முருகன்(42), கொத்தனார் வேலை பார்த்து வந்தார், இவரின் மனைவி நாச்சியார், இவர்களுக்கு, மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இந்த நிலையில், முருகன் வீட்டிற்கே கள்ளக்காதலியை அழைத்து வந்து ,கொஞ்சியதாக தெரிகிறது, இதைப்பார்த்த நாச்சியார் ஆத்திரமடைந்து, முருகனிடம் சண்டைப்போட்டார், அக்கப்பக்கத்தினர் வந்து, சமரசம் பேசி, முருகன் அழைத்து வந்த பெண்ணை வீட்டை விட்டு துரத்தினர், பின்னர், இரவில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த முருகன், நாச்சியாரிடம் ரகளையில் ஈடுபட்டார்.
நாச்சியாரை அடித்து உதைத்தார், ஆத்திரமடைந்த நாச்சியார், மிளகாய்பொடியை தூவி, முருகனை கட்டையால் அடித்தே கொன்றார், தகவல் கிடைத்து, செங்கோட்டை போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி, நாச்சியாரை கைது செய்தனர், இந்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.