Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

ஸ்டாலின் உத்தரவு- கூட்டணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம்……

0

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கு நடக்கும் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த தேர்தலுக்காக திமுக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது. ஏற்கனவே மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினை ஆலோசனை மேற்கொண்டு பணிகளை முடிக்கிவிட்டுவிட்டார்.உள்ளாட்சி தேர்தலில் இமாலய வெற்றிபெற்றது போல இந்த நகராட்சி, மாநகராட்சி தேர்தலிலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி என்பதால் இதில் எப்படியாவது அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று கட்டாயமும் திமுகவிற்கு இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே திமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடலாமா என்கிற ஒரு யோசனையை மா.செ.க்கள் சிலர் ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டாம். இப்போதே வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என்று கூறி உள்ளனராம். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினும், ” இது நல்ல யோசனைதானே ” என்று மாவட்ட செயலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது. அதாவது, தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்பட்ட ஓரிரு நாளிலேயே மனு தாக்கல் தொடங்கும் நாள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறதாம்.அப்படி அறிவிக்கப்பட்டால் வேட்பாளர்களை தேர்வு செய்ய போதிய அவகாசம் இருக்காது. இதனால் சில சிக்கல் வரும் நிலை. முக்கியமாக திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகள் அதிக சீட்டுகள் கேட்டு தொந்தரவு செய்ய நாட்கள் இருக்காது. திமுக கொடுக்கிற சீட்டுகளை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படும். அதோட அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

இதனால் தேர்தல் நேரத்தில் நமக்கு சாதகமான முடிவுகள் வரலாம் என்று திமுக தலைமை கருதுவதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை கணக்கிட்டே தங்கள் வேட்பாளர்களை தயாராக இருக்க வைக்க வேண்டும் என்று திமுக தலைமை கருதுகிறதாம். இந்த நோக்கத்தில்தான் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று அறிவாலயம் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது. இது கூட்டணி கட்சிகளுக்கு வைக்கப்படும் செக் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கு வைக்கப்படும் செக் ஆகும்.இதற்காக மாவட்ட செயலாளர்கள் இறுதிக்கட்ட பணிகளை சட்டென முடிக்க வேண்டும் என்று தலைமையிடம் இருந்து அறிவிப்பு சென்று இருக்கிறதாம். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே திமுக வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். அல்லது யார் வேட்பாளர் என்பதை சம்மந்தப்பட்டவருக்கு மட்டும் தகவல் தெரிவித்து அவர்களை முன் கூட்டியே தயாராக இருக்க வலியுறுத்தும் என்று கடைசி கட்ட தகவல்கள் வருகின்றன. வேட்பாளர் அறிவிப்பு இல்லாத தொகுதிகள், இடங்கள் மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறித்து.

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்