பனாஜி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவத் வலியுறுத்தி உள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியின் வாகனம், விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் 20 நிமிடங்கள் காத்திருந்தது.மோடி நிகழ்ச்சிகள் ரத்துபின்னர் பிரதமர் மோடி பஞ்சாப் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். அப்போது, நான் உயிருடன் திரும்பிவிட்டேன் என உங்க முதல்வரிடம் சொல்லுங்க என பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஜனாதிபதி கவலைஇது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார். மேலும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவலையை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவையும் உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.பஞ்சாப் அரசு விளக்கம்இருந்த போதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகவே செய்யப்பட்டிருந்தன என்பது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங்கின் நிலைப்பாடு. ஆனால் பாஜக இதனை அவ்வளவு எளிதாக விடுவது இல்லை என்பதில் உறுதியாக உள்ளது. தற்போது பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்து வருகிறது.பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கைகோவா ஆளுநர் ஶ்ரீதரன் பிள்ளையை மாநில முதல்வர் பிரமோத் சாவத், மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பின் போது, பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிகழ்ந்த குளறுபடிகளுக்காக பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார் முதல்வர் பிரமோத் சாவத். பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரும் தங்களது கடிதத்தையும் ஆளுநரிடம் பிரமோத் சாவத் தலைமையிலான குழு வழங்கியது