Tamil News Channel Trichy Tamilnadu India online News Online

அரசு பேருந்தில் சிக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

0

மணப்பாறை ஜன8: திருச்சி மாவட்டம் ,மணப்பாறை அருகே அரசு பேருந்தில் சிக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மணப்பாறை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் கண்ணதாசன்(29). இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வாகன கடன் வசூல் செய்யும் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். வேலை நிமித்தமாக வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறையிலிருந்து காவல்காரன்பட்டிக்கு தனது இருச்சக்கர வாகனத்தில் கண்ணதாசன் சென்றுக்கொண்டிருந்த போது பாலகருதம்பட்டி அருகே எதிர்பாராதவிதமாக துவரங்குறிச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு நகர பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸார் கண்ணதாசன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள புத்தாநத்தம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

படவிளக்கம்: விபத்தி ஏற்படுத்திய அரசு பேருந்து (உள்படம்) கண்ணதாசன்

Leave A Reply

Your email address will not be published.

Tnews Tamil செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்