இந்தியாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் தொற்றும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகள் தீவிரமாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன? நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவால் நாள்தோறும் லட்சக்கணக்கில் பாதிப்புகளை பதிவுசெய்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த மாதம் பெங்களூருவில் முதன்முதலாக ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டது. தற்போது ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு சுமார் 1800 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.அதிகரிக்கும் கொரோனாபுத்தாண்டுக்குப் பிறகு கொரோனா பரவல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி நூறு என்றிருந்த கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் இரண்டாயிரத்தைக் கடந்து தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதே போல இறப்பு விகிதமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது.ஞாயிறு பொதுமுடக்கம்கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது முடக்கம் அமலாக்கப்படும் மேலும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றும், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை, இரவு ஊரடங்ககு எனவும், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.எச்சரிக்கைகொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பெரிய கட்டுப்பாடுகள் இல்லாததால், ஆறு மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் நிலைமை மோசமாகிவிட்டது. இந்தியாவில் கொரோனா 3ம் அலை அடுத்த 2 வாரத்தில் உச்சத்தை எட்டும் என மருத்துவ அறிஞர்கள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், இந்தியாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்றும் என்றும்தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.தயார் நிலையில் மருத்துவமனை”இந்தியாவில் அடுத்த இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். இதனால் மருத்துவமனை நிரம்பும் நிலை உருவாகும். ஆனால், கொரோனா இரண்டாவது அலையின்போது மருத்துவமனையில் சிகிச்சைகளுக்கு இடநெருக்கடி ஏற்பட்டதுபோல், மூன்றாவது அலையில் இருக்காது. இந்தியாவில் மருத்துவமனைகள் தயாராகவே உள்ளது” என விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று மத்திய அரசின் நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் அரோரா தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.,,, ச்சரிக்கும்தலைமை விஞ்ஞானி, கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது: