காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆயிரம் ரூபாய் முதல் காவல்துறையினர் ஏலம் விட்டதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலத்தில் எடுத்து சென்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் அதாவது கொலை கடத்தல் வழக்குகளை ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்களை நீதிமன்றத்தில் மூலமாக உரிமையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.அவ்வாறு நீதிமன்றத்தின் மூலம் வாகனங்களை திரும்பப் பெறாமல் அல்லது சாலைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து உரிமை கோரப்படாத வாகனங்களை காவல் நிலையத்தில் போலீசார் வைத்திருந்தனர். குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் திடீரென வந்த மேக கூட்டம்.. ராஜ்நாத்சிங்கிடம் அறிக்கை!பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்நீண்ட நாட்களாகியும் அந்த வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராமல் இருந்து வருவதால் வாகனங்களை ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக யாரும் உரிமை கோராத வாகனங்களை ஏலம் விட காவல்துறையினர் முடிவு செய்தனர் இதையடுத்து. காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 1800க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.வாகனங்கள் ஏலம்இதனையடுத்து மூன்று நாட்களாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் பணியானது இன்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஏலம் எடுக்க வருபவர்கள் ஆயிரம் ரூபாயை குறைந்தபட்ச ஏலத் தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.ஏலம் எடுக்க குவிந்த மக்கள்இதையடுத்து வாகனங்களை ஏலம் எடுப்பதற்காக ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி ரசீது பெற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்தனர். இதனால் கொரோனா நோய்த் தொற்றை அதிகரிக்கும் இருக்கும் வகையில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஏலம் எடுக்க வருபவர்கள் கட்டாயமாக தடுப்பூசி சான்றிதழ் காட்டவேண்டும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறை சார்பாக முககவசம் வழங்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.பொதுமக்கள் ஆர்வம்இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், காஞ்சிபுரம் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ,ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினரின் முன்னிலையில் 1817 இருசக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள், 20 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 1852 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. மிகக் குறைந்த அளவு விலையிலேயே ஏலம் எடுக்கலாம் என்பதால் ஏராளமானோர் குவிந்து வாகனங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்