சென்னை: அம்மா மினி கிளினிக் என்பது தற்காலிக அமைப்புதான் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 2000 கிளினிக்குகளில் 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்ப்புறங்களில் 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் செயல்பட்டு வந்தன.மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் நியமனம் செய்யப்பட்டனர். சளி, காய்ச்சல், உடல் வலி என வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதந்திர மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த கிளினிக்குளை காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிகளும் இந்த மினிகிளினிக்களில் போடப்பட்டு வந்தன.கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தொற்று அதிகரிக்கவே, அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிக்கு மாற்றப்பபட்டனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் தற்காலிகமாக மூடப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடக்கிறது.. கொந்தளித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தற்காலிகமாக மூடப்பட்டாலும் துணை சுகாதார நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். கொரோனா தடுப்பு பணிகள் முடியும் வரை மினி கிளினிக்குகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அம்மா மினி கிளினிக் திறப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகவே இல்லை.இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் செயல்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் நிரந்தரமாக மூடப்படுவதாக தெரிவித்தார். அம்மா மினிகிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மாற்றுப்பணியிடம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்