அரசின் ஒழுங்கற்ற பள்ளிக் கட்டமைப்பால்…, நெல்லையில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு..
- அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கட்டமைப்பு பற்றி அக்கறை கொள்ளாத நிர்வாக நடைமுறையால் பெருமழையைத் தொடர்ந்து கட்டிட இடிபாடிகள் தொடரும் அபாயம். புள்ளி விபரங்கள் மட்டுமே கேட்டு படிவம் நிரப்புதலால் எந்த தீர்வும் எட்டப்படப் போவதில்லை என்பதை கல்வி ஆட்சி நிர்வாகம் இனியாவது உணர்ந்தாக வேண்டும். மராமத்து பணிகளை மேற்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையெனில், தீர்வு எட்டப்படும்வரை…, “தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி” தொடர் போராட்டங்களை கையில் எடுக்கும்.